முன்னாள் எம்.பி யின் கொலை வழக்கில் புதிய திருப்பம்... சகோதரர் கைதானதால் பரபரப்பு...

சென்னை அருகே முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியாக அவரது சகோதரர் கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் எம்.பி யின் கொலை வழக்கில் புதிய திருப்பம்... சகோதரர் கைதானதால் பரபரப்பு...

செங்கல்பட்டு | சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார். இதனிடையே கட்சியில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார். 

இவர் கடந்த 22 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். இவரது காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே வந்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் ஜேசிபி கவிந்து ஒருவர் உயிரிழப்பு...

இதனைத் தொடர்ந்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது.

இதனால் மஸ்தானின் கார் ஓட்டுநர் இம்ரான் பாஷா, தமீம்சுல்தான், நசீர், தாப்பிக் அகமது உள்ளிட்ட 5-பேரை கைது செய்தது. மேலும் கொலை வழங்கு குறித்து விசாரித்ததில் அவரது சகோதரர் ஆதாம் பாஷாவையும் ஆறாவது குற்றவாளியாக கைது செய்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் சிறையில் அமைத்தனர்.

மேலும் படிக்க | போராட்டம் செய்த 50 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...