அத்துமீறும் புதுச்சேரி நகராட்சி...வியாபாரிகள் போராட்டம்!

சாலையோர ஒழுங்குப்படுத்தல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை மீறி கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் பொதுபணித்துறை, நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

அத்துமீறும் புதுச்சேரி நகராட்சி...வியாபாரிகள் போராட்டம்!

பொதுபணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் சட்டவிரோதமாக நடந்து கொள்வதாக புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

ஊழியர்கள் அத்துமீறலா?

புதுச்சேரியில் 500 க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தால் நகரத்தில் உள்ள சாலையோர கடைகளை பொதுபணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இதற்கு சாலையோர வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சாலையோ வியாபாரிகள் போராட்டம்

இந்நிலையில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர், சாலையோர ஒழுங்குப்படுத்தல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை மீறி கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் பொதுபணித்துறை, நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

காமராஜர் சாலை சந்திப்பில் புதுச்சேரி நகராட்சியால் வழங்கப்பட்ட வணிக உரிமங்களின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.