வெள்ளத்திற்கு மத்தியில் அலட்சியமாக தரைபாலம் கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள்...

ஆபத்தை உணராமல் தரைபாலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் கடந்து வருவதால், தடுப்புகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்திற்கு மத்தியில் அலட்சியமாக தரைபாலம் கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள்...

விழுப்புரம் : செஞ்சி மேல்களவாய் தரைபாலம் முற்றிலும் தண்ணீர் போவதால் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகன ஒட்டிகள் மற்றும் குழந்தைகள் குளித்து வருவதால் அசம்பாவிதம் தடுக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | நெய்தல் ஆற்றில் சிறுபாலம் உடையும் அளவு கரைபுரண்டோடிய வெள்ளம்...

இந்நிலையில் மேல் களவாய் தரபலாம் வழியாக தண்ணீர் செல்வதால் சுற்றியுள்ள கிராமங்களான நெகனூர், சேதுவராயநல்லூர், பனப்பாக்கம், வீரனாமூர் ,சண்டிசாட்சி, பென்னகர், வெடால் என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல இருப்பதாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் படிக்க | படிப்படியாக குறையும் மழையின் தீவிரம் - வானிலை ஆய்வு மையம்

மேலும் இருசக்கர வாகனங்கள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | வாக்காளர் சிறப்பு முகாம்...! ஒரே நாளில் இவ்வளவு விண்ணப்பங்களா...?