எள்ளு தரையில் படாத அளவில் குவிந்த பக்தர் கூட்டம்...

திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

எள்ளு தரையில் படாத அளவில் குவிந்த பக்தர் கூட்டம்...

விழுப்புரம் | வானுார் அடுத்த திருவக்கரையில் பிரசித்தி பெற்ற சந்திர மவுலீஸ்வரர் கோவிலில், வக்ர காளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில், தொண்டை நாட்டில் உள்ள 32 சிவ தலங்களுள் 30வது திருத்தலமாகும்.

சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன், 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கமிட்டி அமைக்காததால், கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.

மேலும் படிக்க | மகா கும்பாபிஷேக விழா...பக்தர்களால் நிரம்பி வழிந்த கோவில்கள்!

தற்போது, இக்கோவில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.

இன்று  மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில், காலை 10:55 மணிக்கு விமானங்கள், மற்றும் ராஜ கோபுரங்களுக்கும், 11:15க்கு மூல மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி அர்ச்சுனன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

மேலும் படிக்க | ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பட்டு வஸ்திர மரியாதை...