அண்ணாத்த படத்தில் இணையும் பாலா..! வெங்கட் பிரபுவை பின்பற்றும் இயக்குநர் சிவா..!

கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் பாலா?

அண்ணாத்த படத்தில் இணையும் பாலா..! வெங்கட் பிரபுவை பின்பற்றும் இயக்குநர் சிவா..!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. இயக்குநர் சிவா இயக்கத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். 

கடந்தாண்டு முதல் நடந்து வரும் படப்பிடிப்பு அவ்வப்போது கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் நடந்து வரும் இப்படத்தில் நடிகர் பாலா இணைந்திருப்பதாக, தனது சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்திருக்கிறார். 

2002-ம் ஆண்டு அன்பு என்ற திரைப்படம் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் பாலா. தொடர்ந்து காதல் கிசு கிசு உள்ளிட்ட தமிழ், மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், இயக்குநர் சிவாவின் தம்பி. இயக்குநர் சிவா அஜித்குமாரை வைத்து இயக்கிய வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து பிரபலமான பாலா, தொடர்ந்து சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திலும் இணைந்திருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது படங்களில் தம்பியான பிரேம் ஜியை நிச்சயம் நடிக்க வைப்பார். தற்போது இவரை இயக்குநர் சிவாவும் பின்பற்றுகிறாரோ என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து வருகின்றனர்.