நடிகர் திலீப்குமாரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலீப்குமாரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

இதே பாதிப்புக்கு திலீப்குமார் இம்மாதத்தில் மட்டும் 2-வது முறையாக அனுமதிக்கப்படுகிறார். இந்தநிலையில் தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகத் அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்திருக்கிறார். அவர் அவசர சிகிச்சை பிரிவிலேயே இன்னும் நீடிப்பதாகவும் சாதாரண பிரிவுக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்களின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.