"நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை..!” - அதிகாரிகள் விளக்கம்.

"நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை..!”  - அதிகாரிகள் விளக்கம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே ஓராவி அருவி பகுதியில் தான் வாங்கி இருந்த 7 ஏக்கர் நிலத்திற்கு அருகில் உள்ள பொதுப் பாதையை ஆக்கிரமித்து அப்பகுதி மக்கள் பாதையை பயன்படுத்த விடாமல் செய்ய முயற்சிப்பதாக புகார் கடந்த வாரம் எழுந்தது.

அவர் வாங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த சதுப்பு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளார் என்ற புகார் எழுந்தது.

 அந்த விவகாரத்தை பிரதம மந்திரி அலுவலகத்திற்கு அசோகன் என்பவர் புகார் மனுவாக அனுப்பியதன் அடிப்படையில், புகாரின் பேரில் வருவாய்த்துறை மண்டல உதவி அலுவலர் பாண்டியன் தலைமையிலான குழு ஆய்வு செய்ததில் பிரகாஷ் ராஜ் 2012 ஆம் ஆண்டு முறையான பத்திர பதிவின் மூலம் நிலத்தை பெற்றுள்ளதாகவும், அப்பகுதியில் சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு எதுவும் செய்யப்படவில்லை என ஆய்வுக்கு பின்னர் வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது இடத்திற்கு அருகில் செல்லும் பொதுப் பாதையை அப்பகுதி  பழங்குடி மக்கள், விவசாயிகள் என யாரும் செல்ல தடை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும்  படிக்க  | எளிமை மனிதன் கக்கன் வாழ்க்கை வரலாறு படம் இன்று வெளியாகியுள்ளது...!