சிவன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம்.. சிம்புவின் புகைப்படம் வைரல்..!!

நடிகர் சிம்பு சிவனை வழிபடுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம்.. சிம்புவின் புகைப்படம் வைரல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, அருமையான கம்பேக் கொடுத்து, ரசிகர்களிடத்தில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து மாஸான கம்பேக் கொடுத்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து பத்து தல படத்திலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இரண்டு படங்களிலும் நடிக்க உள்ளார்.

Image

சிம்பு எப்போதும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். எனவே அடிக்கடி ஆன்மீகப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் சிம்பு தற்போது கர்நாடகாவில் உள்ள முருதீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள சிவன் சிலை முன்பு தரிசனம் செய்யுமாறு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.