நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு...!

நடிகர் ரஜினிகாந்த்தை இன்று நேரில் சென்று சந்தித்தார் நடிகர் சங்க தலைவர் நாசர். மரியாதை நிமிர்த்தமாக சந்தித்ததாக பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று  நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு...!

நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவியில் நாசரும், பொதுச்செயலாளர் பதவியில் விஷாலும், பொருளாளர் பதவியில் கார்த்தியும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து நடிகர் சங்க கட்டிட பணிகளை துவங்குவதற்கு ஆயுத்தமாக உள்ளனர்.

இந்நிலையில் இன்று நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகிய மூவரும் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் இருக்கும் அவரது வீட்டிற்கே சென்று  நேரில் சந்தித்துள்ளனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் நாசர், இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நடிகர் சங்க கட்டிட பணிகளை துவங்க உள்ளோம். அதற்காக ஒவ்வொருவராக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி இன்று நடிகர் ரஜினிகாந்த்  அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். அப்போது அவர்,  கட்டிட பணிகள் பற்றி மிகவும் அக்கறையாக விசாரித்ததாகவும், மேலும், கட்டிடம் குறித்து நிறைய ஆலோசனைகளையும் வழங்கியதாகவும் கூறினார்.