கிக் பாக்ஸிங் கற்றுக்கொள்ளும் ஐஸ்வர்யா மேனன்...க்யூட் பாக்ஸர் என வர்ணிக்கும் ரசிகர்கள்.!

கிக் பாக்ஸிங் கற்றுக்கொள்ளும் ஐஸ்வர்யா மேனன்...க்யூட் பாக்ஸர் என வர்ணிக்கும் ரசிகர்கள்.!

தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து அறிமுகமான நடிகை தான் ஐஸ்வர்யா மேனன்.

அதனைதொடர்ந்து ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றவர் இவர் என்றும் சொல்லலாம்.

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது தமிழ் படம்-2 தான், ஆம் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.

இதனைதொடர்ந்து சுந்தர் சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இப்படி தமிழ் சினிமாவில் படிபடியாக உயர்ந்து வரும் இவர், எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வபோது இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகியும், லைக்ஸ்களை குவித்தும் வருவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.