7 கண்டங்களை பைக்கில் வலம் வந்த பெண்.. நேரில் சந்தித்து அஜித் பாராட்டு... வைரல் புகைப்படம்

7 கண்டங்களை பைக்கில் வலம் வந்த பெண்.. நேரில் சந்தித்து அஜித் பாராட்டு... வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று அசத்தினார்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அஜித், தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இப்போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பயிற்சிக்கிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்ற நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் அஜித்தை தேடி வந்து புகைப்படம் எடுத்துள்ள நிலையில், அஜித் ஒருவரை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

தனி ஒரு பெண்ணாக மோட்டார் சைக்கிளில் 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை சுற்றி வந்த மாரல் என்ற பெண்மணியை தான் நடிகர் அஜித் நேரில் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் மாரலிடம் நடிகர் அஜித் அவரது அனுபவம் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்ததாக தெரிகிறது.