வலிமை படத்தில் அஜித் சிங்கிள் தான்... இயக்குநர் ஓபன் டாக் 

வலிமை படத்தில் அஜித் சிங்கிள் தான்... இயக்குநர் ஓபன் டாக் 

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் வலிமை. பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

வலிமை படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றன. 

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் ஹூமா குரேஷி பைக் ஸ்டண்ட் காட்சிகள் வெளியாகின.

இந்நிலையில் வினோத் அளித்துள்ள பேட்டியில் கொரோனா லாக் டவுனால் கதையில் நிறைய மாற்றினோம். எனவே அஜித்துக்கும் ஹூமா குரேஷிக்கும் காதல் காட்சிகள் கிடையாது. படத்தில் இருவரும் நண்பர்கள். அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்