Vikram படத்துக்காக 60 டிக்கெட்டுகளை வாங்கிய கமல் ரசிகர்...என்ன செய்தார் தெரியுமா..? கடுப்பில் மற்ற ரசிகர்கள்

கமலின் தீவிர ரசிகர் ஒருவர் ’விக்ரம்’ படம் பார்ப்பதற்காக 60 டிக்கெட்டுகளை வாங்கி, அதனை ஹாட் வடிவில் அமைத்து அதற்கிடையில் படுத்துக்கொண்டு போஸ்ட் போட்டிருப்பது அனைவரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

Vikram படத்துக்காக 60 டிக்கெட்டுகளை வாங்கிய கமல் ரசிகர்...என்ன செய்தார் தெரியுமா..? கடுப்பில் மற்ற ரசிகர்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் அனைவரையும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் வைத்துள்ளது.  வருகிற ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படம் குறித்து வெளியாகும் அடுத்தடுத்த தகவல்களும், சர்வதேச லெவலில் நடைபெறும் ப்ரொமோஷன் பணிகள் ஆகியவை படம் மீதான ஒரு ஆர்வத்தை தூண்டி வருகிறது. 

இன்னும் இரண்டு நாளில் வெளியாக உள்ள இப்படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஏற்கனவே துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் பெருபாலான தியேட்டர்களில் அடுத்த ஒரு வாரத்திற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், ஒருசில தியேட்டர்கள் ஹவுஸ் புல் ஆகிவிட்டன. அப்படி இருந்தும் கமல் ரசிகர்கள் பலர் நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ‘விக்ரம்’ படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தே ஆகணும் என்று பெற தீவிரமாக போராடி வருகின்றனர். பலர் எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும் என என்னென்னவோ செய்து வருகின்றனர். 

இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த கமலின் தீவிர ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தின் 60 டிக்கெட்களை வாங்கி உள்ளார். வாங்கியதோடு மட்டுமில்லாமல் அதனை ஹார்ட் வடிவில் அடுக்கி வைத்து, அதற்கு நடுவில் படுத்தபடி போட்டோ எடுத்து, அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இவரு இந்த போஸ்ட்ட பகிர அது வைரலாக... அதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாக...எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க.... 

என்னதான் பெரிய நடிகர்களின் தீவிர ரசிகர்கள் இது போல் செய்வது ஒன்றும் புதிதில்லை என்றாலும், டிக்கெட் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் மற்ற ரசிகர்களை இது போன்ற சம்பவங்கள் கடுப்பில் ஆழ்த்தி வருகிறது.

ரசிகர்கள் ஒருபுறம் இருக்க, இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தனை டிக்கெட் வாங்கி என்ன தான் செய்வாங்க...family friends - ச அழைத்துச் செல்வதாக வைத்தாலும் 60 என்பது கொஞ்சம் அதிகம் தானே... ஒருவேளை பிளாக்கில் வித்துடுவாங்களா அல்லது வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே இப்படி வாங்கி வைத்திருக்கிறார்களா... நாங்க ஒரு டிக்கெட்டே கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனா நீ மட்டும் எப்படி 60 டிக்கெட் வாங்கிருக்க.. என பெரும்பாலான நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.