தீபாவளி விருந்தாக அண்ணாத்த திரைப்படம் வெளியீடு... ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...

தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை கண்டு ரசிக்க, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஏராளமானோர் அதிகாலையிலே தியேட்டர் வாசலில் குவிந்தனர்.

தீபாவளி விருந்தாக அண்ணாத்த திரைப்படம் வெளியீடு... ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...

ரஜினியின் 168-வது படமான அண்ணாத்த திரைப்படத்தில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தீபாவளி நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. இதனையொட்டி, திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், ரஜினியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பூக்களை தூவி உற்சாகம் அடைந்தனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும், திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் சிவகார்த்திகேயன், கவின், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் அண்ணாத்த படத்தை கண்டு ரசித்தனர். இதைப்போல குஷ்பு, விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், சதீஷ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் அண்ணாத்த படத்தை கண்டு ரசித்தனர்.