ஆன்ட்டி இந்தியன் டிரைலர் வெளியானது.!!!

ஆன்ட்டி இந்தியன் டிரைலர் வெளியானது.!!!

யூ டியூப்பில் திரைப்படங்களை விமர்சனங்கள் செய்து வந்ததால் பிரபலமானவர்தான் புளூ சட்டை மாறன். இவர் தற்போது இயக்கி நடித்துள்ள படம் ஆன்ட்டி இந்தியன்.

இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் ஒரு பிரபலம் மரணம் அடைந்து விடுகிறார். அதையடுத்து இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் போன்ற மத தலைவர்கள் தங்களது மத வழக்கப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று வாக்குவாதம் செய்கிறார்கள். 

அதையடுத்து அது அரசியல் மற்றும் போலீஸ் பிரச்சினையாகிறது. 

இந்த பிரச்சினைக்கு எந்தமாதிரியான தீர்வு காணப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரெய்லர் மூலம் காண்பிக்கின்றனர் என தெரிகிறது.