பா ரஞ்சித்தை கட்டியணைத்த அனுராக்!!! வைரலாகும் போட்டோக்கள்!!!

இயக்குனர் அனுராக் கஷ்யப், பா ரஞ்சித்தைக் கட்டிப் பிடித்து பாராட்டி இருக்கிறார். அதன் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பா ரஞ்சித்தை கட்டியணைத்த அனுராக்!!! வைரலாகும் போட்டோக்கள்!!!

பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வெளியாக தயாராகும் படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’. மிகவும் வித்தியாசமான ஒரு முயற்சியாக உருவாகியுள்ள இந்த படமானது, பல தரப்பட்ட ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும். அட்டக்கத்தி மூலமாக அறிமுகமாகி, மெட்ராஸ் என்ற படம் மூலம், மக்கள் மத்தியில், அந்த படத்தில் வரும் சுவரை போலவே உயர்ந்து நின்றார் பா ரஞ்சித்.

இவர், சினிமாவை கலையாக மட்டும் பார்க்காமல், தனது கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு மேடையாகவே பார்த்து வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்காக, அனைவரும் ஆர்வத்தோடு காத்து வருகின்றனர். மேலும், சமீபத்தில், படத்தின் பாடலான ‘ரங்கராட்டினம்’ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் படிக்க | ”தாலி கட்டுனாதா காதல தொடர முடியும்னா அவ்வளவு தானா காதலோட மதிப்பு”?

இதனைத் தொடர்ந்து, படத்தின் சிறப்பு திரையிடல் தற்போது நடந்தது. அதில் நடிகை நந்திதா தாஸ், இயக்குனர் நீரஜ் கேவான், இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் போன்ற பல பெரும் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மும்பையில் நடந்த இந்த திரையிடலுக்கு வந்த அனைத்து பிரபலங்களும், படத்தையும், படத்தை இயக்கிய பா ரஞ்சித்தையும் பாராட்டி புகழ்ந்துள்ளனர். ஆனால், அதன் உச்ச கட்டமாக, இயக்குனர் அனுராக் கஷ்யப், பா ரஞ்சித்தை, இருக்கி அணைத்து மனதாரப் பாராட்டி இருக்கிறார்.

Image

யாழி ஃபிலிம்ஸ் மற்றும் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த நட்சத்திரம் நகர்கிறது படமானது, தென்மா என்பவரின் இசைக் கொண்டு வெளியாக இருக்கிறது. Queer என்ற தனிப்பட்ட காதல் ரகத்தைச் சேர்ந்தவர்களின், அன்பு குறித்து அதிகமாக பேசப்படாத நிலையில், அதனையே மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் நட்சத்திரம் நகர்கிறது. கலயரசன், காளிதாஸ் ஜெயராம், ஷுஷாரா விஜயன், ஹரிகிருஷ்ணன், வினோத், சுபத்ரா ராபர்ட், ஷபீர் கள்ளரக்கல், ரெஜின் ரோஸ், தாமு, ஞான பிரசாத், வின்சு, அர்ஜுன் பிரபாகரன், உதய சூரியா, ஸ்டீபன் ராஜ், ஷெரின், மனிசா என பெரிய பட்டாளத்தைக் கொண்டு நகர இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது.

பாலிவுட்டில், முன்னணி இயக்குனராக வலம் வரும் அனுராக், தென்னிந்திய படங்களுக்கென்று தனி மரியாதை கொண்டவர். பல தமிழ் படங்களை மனதார பாராட்டித் தள்ளிய அனுராக், கடந்த 2018ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இவர் பா ரஞ்சித்தை கட்டி அணைத்த போட்டோ இணையத்தில் படு வைரலாகி ரசிகர்களை நெகிழ வைத்து வருகிறது.

மேலும் படிக்க | முதன்முறையாக பா.ரஞ்சித் படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்.. அப்படி என்ன இருக்கிறது படத்தில்?