நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட அபர்ணா தாஸ்....வச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள்....!!

நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட அபர்ணா தாஸ்....வச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள்....!!

நடிகர் விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

தங்ககடத்தலை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாகியிருப்பதாவும், ராணுவ கமாண்டோவாக நடிகர் விஜய் நடித்துள்ளார் என ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த படத்தில் மலையாள இளம் நடிகையான அபர்ணா தாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த அபர்ணா தாஸ் புகைப்படம் டிரெண்டிங் ஆனது.  

இந்தநிலையில் தற்போது நடிகை அபர்ணாதாஸ் நீச்சல் குளத்தின் அருகில் வெள்ளை டவலுடன் நின்றபடியும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.