தத்தெடுத்த தாயும் குவியும் பாராட்டும்...சபாஷ் ரோஜா !!!

தத்தெடுத்த தாயும் குவியும் பாராட்டும்...சபாஷ் ரோஜா !!!

ரோஜா என்றும் அழைக்கப்படும் ரோஜா செல்வமணி, ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் நடிகை ஆவார். ஆந்திரப் பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக அவர் பணியாற்றி வருகிறார். 1991 முதல் 2002 வரை தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார்.தெலுங்கு சினிமாவை  முன்னோடியாக கொண்டு பிறகு தமிழ் சினிமாவில் நடித்து 80'ஸ் களின் சிறந்த நடிகையாக வளம் வந்தார்.இவர் ரஜினி,சரத்குமார்,பிரபுதேவா,போன்ற  நடிகர்களுடன் நடித்துருக்கார்.பின்பு இயக்குனரான ஆர் கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

மேலும் தெரிந்து கொள்ள /// சசிகுமார் நடிப்பில் வெளியாக இருக்கும் காரி..."இது என் மண்ணின் கதை,ஜல்லிக்கட்டின் கதை" என பெருமிதம்...

தத்தெடுத்த தாய் :

மேலும் தெரிந்து கொள்ள /// ஆதிபுருஷை விட இது எவ்வளவோ மேல்... “ஹனுமான்” பட டீசருக்கு குவியும் பாராட்டுகள்...

இந்நிலையில் ,திருப்பதியை சேர்ந்தவர் புஷ்ப குமாரி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு தனது தாயையும் தந்தையையும் பறிகொடுத்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த புஷ்ப குமாரியை மகளாக தத்தெடுத்தார் நடிகை ரோஜா.தற்போது 12 ஆம் வகுப்பு முடித்துள்ள புஷ்ப குமாரி, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதேபோல் நீட் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்று திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.அவரது படிப்பு செலவு முழுவதையும் நடிகை ரோஜாவே ஏற்றுள்ளார். ரோஜா, அவரது கணவர் ஆர் கே செல்வமணி மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் புஷ்ப குமாரியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்துள்ளனர்.

கட்டியணைத்து உச்சந்தலையில் முத்தம் :

மேலும் தெரிந்து கொள்ள /// முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்..!

மேலும் நடிகை ரோஜா புஷ்ப குமாரியை கட்டியணைத்து உச்சந்தலையில் முத்தம் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெற்றோரை இழந்தை சிறுமியை தத்து எடுத்ததோடு அவருடைய கனவையும் நனவாக்கிய நடிகை ரோஜாவின் இந்த தாயுள்ளத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.நடிகை ரோஜா செய்த  இக்காரியத்தால் நெகிழ்ந்து போயுள்ளனர் அவரது ரசிகர்கள்.

---ஸ்வாதிஸ்ரீ