crush போட்டோவை வெளியிட்ட போனி அங்கிள்... வலிமை அப்டேட் கேட்டா என்ன அப்டேட் தரனு விளாசும் நெட்டிசன்ஸ்..

"My First Crush" என போட்டோ பதிவிட்ட போனி கபூர்...

crush போட்டோவை வெளியிட்ட போனி அங்கிள்...  வலிமை அப்டேட் கேட்டா என்ன அப்டேட் தரனு விளாசும் நெட்டிசன்ஸ்..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் அடுத்தததாக வலிமை படத்தையும் அதிக பொருட்செலவில் எடுத்துள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ள நிலையில், அந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் ரசிகள் அனைவரும் இப்படத்தின் டீசருக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், இன்று இந்த படத்தின் தீம் மியூசிக் மற்றும் புரோமோ வீடியோ வெளியாக உள்ளது.

இதனிடையே, வலிமை படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு "My First Crush" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து செம கடுப்பான ரசிகர்கள் வலிமை அப்டேட் தரமால் இதெல்லாம் இப்போ தேவையா என மோசமான கமெண்ட்ஸ்களை அள்ளிவீசி வருகின்றனர். 

View this post on Instagram

A post shared by Boney.kapoor (@boney.kapoor)