10 வருடத்திற்கு பிறகு விஜய்யின் பிளாக் பஸ்டர் படத்தின் பார்ட் 2 வருதாம்..? ஆனால் இந்த முறை யாருடைய கூட்டணியில் தெரியுமா..?

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யின் மாஸான படத்தின் பார்ட் 2 வர உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

10 வருடத்திற்கு பிறகு விஜய்யின் பிளாக் பஸ்டர் படத்தின்  பார்ட் 2 வருதாம்..? ஆனால் இந்த முறை யாருடைய கூட்டணியில் தெரியுமா..?

இன்றைய காலங்களில் பல டாப் ஹீரோக்களின் ஹிட்டான படங்கள் பார்ட் 2 எடுக்கப்பட்டு வருகிறது.  சாமி 2, மாரி 2, சண்டக்கோழி 2, கலகலப்பு 2, விஸ்வரூபம் 2, எந்திரன் 2 , kgf 2 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் தற்போது  சில படங்கள் 2ம் பாகம் எடுக்கும் முயற்சியில் உள்ளன.  கார்த்தியின் கைதி 2, சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2, கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்கள் லிஸ்டில் உள்ளன. 

இப்படி இருக்க தளபதி விஜய்யின் துப்பாக்கி படம் 2ம் பாகம் வரவேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. அது நிறைவேறும் விதமாக, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து துப்பாக்கி படத்தின் 2ம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 2012 ம் ஆண்டு இயக்குனர் A.R. முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் உருவான படம் தான் துப்பாக்கி. இந்த படத்தை A.R. முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். இதில் ஜெயராம், சத்தியன், மனோபாலா, வித்யுத் ஜமாவால் ஆகியோர் நடித்திருந்தனர். ஆக்ஷன், திரில்லர் படமான இதில் இந்திய ராணுவத்தின் புலனாய்வுத்துறை அதிகாரியான விஜய் ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து அழிப்பது தான் படத்தின் கதை. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைத்திருந்தார், மேலும் இந்த படத்தில் கூகுள் கூகுள் பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தை கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது. பாக்ஸ் ஆபீசில் 175 கோடிகள் வசூல் செய்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல விருதுகளையும் பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஹிந்தி, பெங்காலி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து A.R. முருகதாஸ் - விஜய் கூட்டணியில் கத்தி சர்க்கார் போன்ற படங்கள் வெளியானது. 

இந்நிலையில் தற்போது இதன் 2ம் பாகம் இயக்கத்திற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இதனை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதற்காக கலைப்புலி S. தாணுவிடம் இருந்து படத்தின் தயாரிப்பு உரிமத்தை சன் பிக்ச்சர்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த 2ம் பாகத்தையும் A.R. முருகதாஸ் தான் இயக்க உள்ளாரா அல்லது வேறு எவரும் இயக்க உள்ளனரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. தற்போது நடிகர் விஜய் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 ல் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 ல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த துப்பாக்கி 2 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து  காத்து வருகின்றனர்.