திரைத்துறையின் உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே' விருது...! தட்டி தூக்கும் பிரபல பாலிவுட் நடிகை..!

திரைத்துறையின் உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே' விருது...! தட்டி தூக்கும் பிரபல பாலிவுட் நடிகை..!

பழம் பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக்கிற்கு திரைத்துறையின் உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே விருது' வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை ஆஷா 1960 மற்றும் 70 களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர். 79 வயதான இவர் நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கை முழுவதையும் சினிமாத்துறைக்கு தொண்டாற்றியவர். மேலும், அதிக சம்பளம் பெற்ற பெருமையையும் கொண்டவர்.

பல படங்களில் நடித்து, பெரும் புகழை சம்பாதித்த அவர், கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான சார் ஆங்கோன் பர் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு 1992 ஆம் ஆண்டு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 

இந்நிலையில் தற்போது அவருக்கு, 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகை ஆஷா பரேகிற்கு வழங்கப்படுவதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதிப்படுத்தியுள்ளார். சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல். வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஸ்கர், சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், கே. விஸ்வநாத், ரஜினிகாந்த் போன்ற பல திரையுலக பிரபலங்கள் இந்த விருது பெற்று பெருமை சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.