சார்ப்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் பிரபல நடிகரின் மாணவராம்..!!

சார்ப்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் பிரபல நடிகர் ஆரியின் மாணவர் என்ற தகவல் வெளிவந்துள்ளன

சார்ப்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் பிரபல நடிகரின் மாணவராம்..!!

தமிழ் சினிமாவில் ரெட்டச்சுழி படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். ஆனால் அதன் பின்னர் வெளியான நெடுஞ்சாலை படம் மூலமாகவே இவர் பிரபலமானார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்

நடிப்பு தவிர பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் ஆரி கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் எல்.வி.பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு நடிப்புக்கான பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார். இதில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆரி, “எல்.வி.பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் நடிப்பு பயிற்சி இந்த ஆண்டுதான் தொடங்கியுள்ளது. இந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தான், நாளைய வெள்ளித்திரையில் ஜொலிக்க போகும் நட்சத்திரங்கள்.

Aari's next, a space film with aliens- Cinema express


இப்போது சார்ப்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எனது மாணவர் தான். அவரை திரையில் காணும்போது நான் அதிகம் சந்தோசப்பட்டேன். அப்படித்தான் இந்த அகாடமியிலிருந்து செல்லும் மாணவர்கள் யாரேனும், நாளை வெள்ளி திரையில் ஜொலித்தால் அவர்களின் பெற்றோர்களை விட நான் அதிகம் சந்தோசப்படுவேன்” என கூறினார்.