டி44 படத்தில் 3 கதாநாயகிகளுடன் நடிக்கும் தனுஷ்!

’டி44’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி44 படத்தில் 3 கதாநாயகிகளுடன் நடிக்கும் தனுஷ்!

’டி44’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹன்சிகா மோத்வானி, ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக ஒப்பந்தம் ஆகியுள்ளனர். தனுஷ் நடிப்பில் ‘யாரடி நீ மோகினி’, ’உத்தம புத்திரன்’, ‘குட்டி’ போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர், தனுஷின் 44ஆவது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை நடிகர் தனுஷ் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க மித்ரன் ஜவஹர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.