தனுஷின் ‘டி44’படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது..!!

தனுஷின் ‘டி44’படத்தின் முக்கிய அப்டேட்டை வலிமை படம் பாணியில் சர்ப்ரைஸாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் ‘டி44’படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது..!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ்.இவர் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டி44’படத்தில் நடித்து வருகிறார்.

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்,நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்காலிகமாக ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.இதன்மூலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை சர்ப்ரைஸாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவும், பிரகாஷ்ராஜும் டி44 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாரதிராஜாவும் தனுஷும் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.