’சின்ன சின்ன ஆசை’ மழலையின் குரலில் கரைந்த ஏ.ஆர். ரகுமான்... வீடியோ வைரல்!

‘சின்ன சின்ன ஆசை’ என்ற தன் பாடலை இந்தி மற்றும் தமிழ் மொழியில் பாடி அசத்திய சிறுமியின் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

’சின்ன சின்ன ஆசை’ மழலையின் குரலில் கரைந்த ஏ.ஆர். ரகுமான்... வீடியோ வைரல்!

‘சின்ன சின்ன ஆசை’ என்ற தன் பாடலை இந்தி மற்றும் தமிழ் மொழியில் பாடி அசத்திய சிறுமியின் வீடியோவை ஏ. ஆர்.ரகுமான் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர்.ரகுமான். முதலில்‘ரோஜா’திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தன் திறமையை நிரூபித்தவர். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். இதையடுத்து சமீபத்தில் வெளியான '99 சாங்ஸ்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறியுள்ளார். தற்போது இவரது இசையில் 'மூப்பிலா தமிழ் தாயே' என்ற பாடல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இவரது இசைக்கென்றே உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவ்வப்போது, ஒரு குட்டி ரசிகையின் பாடலை கேட்டு அசந்து போன ஏ. ஆர்.ரகுமான் அந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில்  பகிர்ந்திருக்கிறார்.

https://www.instagram.com/tv/CR8h6a6lBEo/

அதில் ஒரு சிறுமி ஏ. ஆர்.ரகுமானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலை இந்தி மற்றும் தமிழ் மொழியில் பாடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த சிறுமிக்கு வாழ்த்துகளை கூறி, லைக்குகளை குவித்து வருகின்றனர்.