எவர் சார்மிங் அதர்வாவின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ..!!

முரட்டு இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் அதர்வா

எவர் சார்மிங் அதர்வாவின் நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. பானா காத்தாடி படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமான அதர்வா, அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது தந்தைக்கு இணையாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதர்வா தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இப்படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், நடிகை ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த மாதம் தனது அடுத்த படத்தில் அதர்வா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வருகிறது.