நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு லதா தான் காரணம்...நெகிழ்ச்சி தெரிவித்த ரஜினிகாந்த்!

நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு லதா தான் காரணம்...நெகிழ்ச்சி தெரிவித்த ரஜினிகாந்த்!

நான், ஆரோக்கியமாக இருப்பதற்கு மனைவி லதாவும், அவரின் அன்பும் மட்டுமே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

ரகசியம் பரம ரகசியம்:

ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கத்தில் சாருகேசி நாடகத்தின் 50வது சிறப்புக்காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நாடகத்தை கண்டு களித்தபின் மேடையில் பேசிய அவர், அபூர்வ ராகங்கள் நடித்த காலத்தில் ரகசியம் பரம ரகசியம் என்ற நாடகத்தை பார்த்ததாகக் கூறினார்.

இதையும் படிக்க : அதிமுக தேர்தல் பணிக்குழுவில்...கூடுதலாக 5 பேர் இணைப்பு...!

தற்போது 47 ஆண்டுகள் கடந்த நிலையில், காலம் யாரை எங்கு கொண்டு போகும் எனத் தெரியாது எனவும், நடத்துனராக இருந்தபோது, விரும்பத்தகாத நண்பர்களால் மது, புகைப்பிடிப்பது உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையான நிலையில், மனைவி லதாவே தன்னை மாற்றியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மது, புகை, இறைச்சி ஆகிய பழக்கங்களில் இருந்து தன்னை அன்போடு லதா வெளிக்கொண்டு வந்ததாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.