பாடல் வரிகள் புரியவில்லை.. அதனால் என்ன? - மூதாட்டிக்கு மருந்தாக மாறிய விஜய்யின் அரபிக் குத்து

பாடல் வரிகளின் சரியான அர்த்தம் என்னவென்று புரியவில்லை. அதனால் என்ன? நடிகர் விஜய். அது போதும். 6 முதல் 60 வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார்.. ட்ரெண்டாகி வரும் வீடியோ

பாடல் வரிகள் புரியவில்லை.. அதனால் என்ன? - மூதாட்டிக்கு மருந்தாக மாறிய விஜய்யின் அரபிக் குத்து

இயக்குநர் நெல்சன் தீலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் தான் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஏபரல் மாதல் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கிடையில் இந்த படத்தில் இடம் பெற்ற அரபி குத்து பாடல் காதலர் தினத்தன்று வெளியானது.. இப்பாடலை பாடகர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷன் வீடியோ வெள்ளிடப்பட்டது.

அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியான அந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். தளபதி விஜய்யின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து பாடல் 30 மில்லியன் வியூஸ், 2.5 மில்லியன் லைக்குகளுடன் தொடர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூதாட்டி ஒருவர் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அரபிக் குத்து பாடலை பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் செம வைரலாகி வருகிறது. இதே போல் ஏற்கனவே விஜய்யின் செலஃபீ புள்ள பாடல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவியதாக வெளியான செய்தியை அடுத்து தற்போது அரபிக் குத்து பாடல் அதே விஷயத்தை செய்து வருகிறது.