"நூறு முறை விழுந்தாலும் எனக்கு மகிழ்ச்சி" வீடியோ மூலம் சூசகமாக பதிலளிக்கும் நடிகை சமந்தா!! இணையத்தில் வைரல்

"நூறு முறை விழுந்தாலும் எனக்கு மகிழ்ச்சி" வீடியோ மூலம்  சூசகமாக  பதிலளிக்கும் நடிகை சமந்தா!! இணையத்தில் வைரல்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதில் ஒன்றாக நடிகை சமந்தா பனிசறுக்கில் ஸ்கேட்டிங் செய்வதுபோன்று வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் பனிச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை சற்றுமுன் சமந்தா வெளியிட்டுள்ளார். அதில் சமந்தா ஸ்கேட்டிங் செய்யும் போது கீழே விழும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அவர் அந்த புகைப்படத்துடன் கூடிய கேப்சனில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ‘நான் குழந்தைகளுடன் பனிச்சறுக்கு பயணத்தை தொடங்கினேன், நூறு முறை விழுந்தாலும்  இந்த அனுபவம் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றிய எனது பயிற்சியாளருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவர் பனிச்சறுக்கில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் பல இடங்களில் வீழ்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி அவர் முன்னேறி கொண்டிருப்பதையே அவர் சூசகமாக  பனிச்சறுக்கு விளையாட்டுடன் தொடர்புபடுத்தி கூறுவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.