ஸ்நாக்ஸ் சாப்பிடும் இடமா அது? பிரியங்கா சோப்ரா கணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் சமூக வலைத் தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

ஸ்நாக்ஸ் சாப்பிடும் இடமா அது? பிரியங்கா சோப்ரா கணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இந்தியில் முன்னணி கதாநாயாகியாக உயர்ந்தார். அதன்பின்னர் பாடகர் நிக் ஜொனாஸை மணந்து அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் ஹாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா  கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் நீச்சல் உடையில் படுத்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் மீது அவரது கணவர் நிக் ஜோனாஸ் ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவது போன்று உள்ள புகைப்படம் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வரும்நிலையில், ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடும் இடமா அது ? என நெட்டிசன்கள் பலரும் பிரியங்கா சோப்ராவின் கணவரை கலாய்த்து வருகின்றனர்.