உண்மையாவா? "கொரோனா குமார்" படம் கைவிடப்பட்டதா? இதுவா காரணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை நடித்து முடித்த பிறகு சிம்பு 'கொரோனா குமார்' படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களுக்காக இப்படம் பாதிலையே கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையாவா? "கொரோனா குமார்" படம் கைவிடப்பட்டதா? இதுவா காரணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு 3 படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

தற்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இதை தொடர்ந்து சிம்பு, பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். இதனையடுத்து, கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்க இருந்தார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. சிம்புக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடிக்க போகிறார் என கூறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா குமார் படத்தை கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தனது சம்பளத்தை 25 கோடியில் இருந்து 30 கோடியாக உயர்த்தியுள்ளாராம். மேலும் தற்போது கமிட்டான 3 படங்களிலும் சிம்பு 30 கோடி சம்பளம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதால், இப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் முடுவு செய்துள்ளதாம்.

சம்பள பிரச்சனையால் கொரோனா குமார் படத்தை கைவிடும் முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.