தீபாவளிக்கு வெளியாகும் 'ஜிகர்தண்டா-2' - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தீபாவளிக்கு வெளியாகும் 'ஜிகர்தண்டா-2' -  மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தொிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.  

இதையும் படிக்க : முதலமைச்சரிடம் பேசுவதற்கு தங்களை அனுமதிக்கவில்லை... பொதுமக்கள் குற்றச்சாட்டு!

இதனையடுத்து, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகா் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகின்றனா். கடந்த மாதங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், இப்படம்  இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.