கபடி கபடி கபடி....முடிஞ்சா புடி...கணவருடன் களத்தில் இறங்கி கபடி விளையாடிய ரோஜா...

நடிகையும் ஆந்திர எம்.எல்.ஏ வுமான ரோஜா மாணவர்களுடன் கபடி விளையாடிய வீடியோ வைரலாகி வருகின்றது.

கபடி கபடி கபடி....முடிஞ்சா புடி...கணவருடன் களத்தில் இறங்கி கபடி விளையாடிய ரோஜா...

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் நடிகையுமான ரோஜா, அவருடைய கணவர் செல்வமணி ஆகியோர் நகரியில் உள்ள அரசு டிகிரி கல்லூரியில் நடைபெறும் கபடி போட்டியில் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் ரோஜா சாரிட்டபிள் டிரஸ்ட் ஏற்பாட்டின் பேரில் நகரில் உள்ள டிகிரி கல்லூரி மைதானத்தில் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு 15 நாட்கள் நடைபெறும் இந்த கபடி போட்டிகளை துவக்கி வைத்த ரோஜா, செல்வமணி ஆகியோர் எதிரெதிர் அணிகளில் சேர்ந்து கபடி விளையாடி மாணவர்களுக்கு கலகலப்பு ஊட்டினர்.