உதயநிதியின் ட்விட்டுக்கு... ரீட்விட் செய்த கமல்ஹாசன் என்ன பதிவிட்டார் தெரியுமா..?

விக்ரம் படம் குறித்த உதயநிதியின் ட்விட்டுக்கு ரீட்விட் செய்த கமல்ஹாசன் எனது ”அன்புத்தம்பிக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

உதயநிதியின் ட்விட்டுக்கு... ரீட்விட் செய்த கமல்ஹாசன் என்ன பதிவிட்டார் தெரியுமா..?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் அனைவரையும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் வைத்துள்ளது. பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வருகிற ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் படம் குறித்து வெளியாகும் அடுத்தடுத்த தகவல்களும், சர்வதேச லெவலில் நடைபெறும் ப்ரொமோஷன் பணிகள் ஆகியவை படம் மீதான ஒரு ஆர்வத்தை தூண்டி வருகிறது.

இந்நிலையில் ’விக்ரம்’ படத்தை வெளியிடவுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலின், ”விக்ரம்” திரைப்படம் சூப்பர்... உலகநாயகன் கமல்ஹாசன் சார், லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி, அனிருத், பகத் ஃபாசில் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி... நிச்சயம் பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் ’விக்ரம்’ இடம்பிடிக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து இதனை ரீட்விட் செய்த கமல்ஹாசன்,  "அன்புத்தம்பி உதயநிதி. விக்ரம் படம் குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறியது எனது மற்ற சகோதரர்களையும் உற்சாகப்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.