ரஜினி, விஜய்யை ஓரங் கட்டிய கமல்..! ரூ.40கோடிக்கு விற்பனையான விக்ரம் படத்தின் டப்பிங் உரிமம்..!

அதிக விலைக்கு விற்பனையான முதல் தமிழ் திரைப்படம்..!

ரஜினி, விஜய்யை ஓரங் கட்டிய கமல்..! ரூ.40கோடிக்கு விற்பனையான விக்ரம் படத்தின் டப்பிங் உரிமம்..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ’’விக்ரம்’’. கடந்த ஆண்டு இந்த திரைப்படத்தின் ’டைட்டில் மோஷன் போஸ்டர்’ வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் பிறகு கொரோனா ஊரடங்கு மற்றும் அரசியல் பணிகளுக்கு சென்ற கமல், என படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடந்த 10-ம் தேதி இப்படத்தின் ’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஒருபுறம் விஜய்சேதுபதி, ஒரு புறம் ஃபகத் பாசில் நடுவில் கமல் என மூன்று பேரின் முகமும் இருக்கும் படியான இந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இடையில், இந்தப் படத்தில் கமலில் மகனாக நடிகர் காளிதாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகின. 

இந்த நிலையில், விக்ரம் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் ரூ.35கோடி முதல் ரூ.40கோடி வரையில் வியாபாரமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மற்ற மொழிகளில் அதிக விலைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை கமலின் ’’விக்ரம்’’ படம் படைத்திருக்கிறது.