கார்த்திக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்.. வைரலாகும் அதிதி போஸ்டர்

கார்த்திக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்.. வைரலாகும் அதிதி போஸ்டர்

கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இரண்டாவது முறையாக நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் முத்தையா கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

இப்படத்திற்கு விருமன் என பெயர் வைத்துள்ளனர். நேற்று இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி இடம்பெற்றுள்ள விருமன் பட போஸ்டரை நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! நீ அனைவரது இதயங்களையும் வெல்லப் போகிறாய். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக” என்று கூறியுள்ளார்.