உதயநிதிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..!

 உதயநிதிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..!

அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருக்கும் உதயநிதி அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் கமிட்டாகி உள்ளனர். இப்படத்திற்கு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ்யை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ . ஆர் .ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எம்எல்ஏவான உதயநிதி அடுத்தபடியாக தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறப்படும் நிலையில் சினிமாவை குறைத்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட எண்ணி உள்ளார்.