” ஜெய்லர் படம் ரிலீஸில் மதுவை தரையில் ஊற்றி குடிக்கமாட்டோம் என சபதம் ஏற்போம்” - நேர்த்திகடன் செலுத்திய ரசிகர்கள்.

” ஜெய்லர் படம் ரிலீஸில் மதுவை தரையில் ஊற்றி குடிக்கமாட்டோம் என சபதம் ஏற்போம்” - நேர்த்திகடன் செலுத்திய ரசிகர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வேண்டிக் கொண்டுள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் முடிந்த நிலையில், படம் அதிக நாட்கள் ஓட வேண்டும் என ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான வேண்டுதல்களை வைத்துள்ளனர். அதில் அங்கப்பிரதட்சனம், சாமியாடுவது,  மண்சோறு சாப்பிடுவது போன்ற சில வேண்டுதல்களும் செய்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ஜெயிலர். 

இதற்காக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், வெயிலுக்குகந்த அம்மன் கோயிலில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் பாலதம்புராஜ் தமைமையில் நடந்த இந்த வழிபாட்டில், நகர செயலாளர் கோல்டன் சரவணன் தன் அதீத விஸ்வாசத்தை காட்டியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு தேங்காயில் ஜெயிலர் என எழுதப்பட்டு, அதனை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்த கோல்டன் சரவணன், பவ்வியமாக அதனை பிடித்தவாறே கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்தார். 

இதையடுத்து சாமியாடிய சரணவனனை, உடன் இருந்த ரஜினி ரசிகர்கள் சாந்தப்படுத்தியதைத்  தொடர்ந்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். 

பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ரசிகர் ஒருவர், தங்கள் தலைவரின் எந்திரன் 2.0 படம் 800 கோடிக்கு மேல் வசூலடித்தது... அதனால் ஜெயிலர் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை பெற வேண்டும், அதற்காகவே இந்த வேண்டுதல் என குறிப்பிட்டார்.

அதோடு, ஜெய்லர் படம் திரையிடப்படும் அன்று நாங்கள் அனைவரும் சேர்ந்து எங்கள் தலைவர் சொன்ன வார்த்தைக்காக பிராந்தியை (மது ) தரியில் ஊற்றி அன்றோடு அந்த பழக்கத்தை விடுவோம் என சபதம் ஏற்போம்”, என உறுதியளித்தார். 

கோயிலில் இதனை கவனித்த பக்தர்கள் சிலர், யாரோ படமெடுத்து யாரோ கோடி கோடியாய் லாபம் ஈட்டுவதற்கு, இவர்கள் கடன் வாங்கி காவடி எடுக்கின்றார்களே என சிலர் கேலி செய்தும், பலர் வேதனையுடன் நகர்ந்தனர்.

இதையும் படிக்க   |  ’ தி ஹண்ட் ஃபார் வீரப்பன்’ : வீரப்பன் குறித்த வெப் சீரிஸில் தொடரும் விடையில்லாக் கேள்விகள்...!