வெந்து தணிந்தது காடு படத்தில் இணையும் மலையாள நடிகர்..!

தி பேமிலி மேன் வெப் தொடரில் நடித்து பிரபலமானவர் நீரஜ் மாதவ்..!

வெந்து தணிந்தது காடு படத்தில் இணையும் மலையாள நடிகர்..!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு உடலை பிட்டாக மாற்றி, செம ஹாண்ட்சமாக மாறியிருக்கும் சிம்பு, அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தீபாவளி அன்றே வெளிவர வேண்டிய மாநாடு, பிறகு நவம்பர் 25-ம் தேதி ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். 

அதன் பிறகு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைவதால் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், வழக்கமான கவுதமின் காதல் படமாக இன்றி இப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. 

இந்த சூழலில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் இணைந்திருப்பதாக 
கூறப்படுகிறது. த்ரிஷ்யம், சார்லி உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் நீரஜ் மாதவ். 
அதுமட்டுமின்றி இந்தியில் மனோஜ் பாஜ்பாய், அதனை தொடர்ந்து தி பேமிலி மேன் வெப் தொடர் மூலம் 
மிகவும் பிரபலமானார். இந்த நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.