மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதுகள் வென்ற சூரரைப்போற்று!

மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில், சிறந்த நடிகராக சூர்யா தேர்வு செய்யப்பட்டதால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இணையத்தில் கலக்கி  வருகின்றனர்.    

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதுகள் வென்ற சூரரைப்போற்று!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.கடந்த 2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று‘.இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்ததால்,ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடக்கவிருக்கும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதைக் கொண்டாடி வருகின்றனர்.