நெல்சன் என்ன இது..? இந்த காட்சியில் என்ன லாஜிக் இருக்கு! கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!!

நெல்சன் என்ன இது..? இந்த காட்சியில் என்ன லாஜிக் இருக்கு! கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் தான் பீஸ்ட். இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

அடுத்தப்படியாக இப்படத்தின் ட்ரைலர் சனிக்கிழமை மாலை வெளியானது. சும்மா மாஸான காட்சிகளுடன் வெளியான பீஸ்ட் ட்ரைலர் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. அதில் உளவுத்துறை ஏஜெண்டாக நடித்திருக்கும் விஜய்யின் மாஸ் கெட்டப்பை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அதேசமயம் ட்ரைலர் கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. ட்ரைலரில் அடங்கியிருக்கும் காட்சிகள் பற்றி பல விதமான ட்ரோல்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன. விக்ரம் பட சண்டை காட்சி போலவே பீஸ்ட் படத்திலும் அமைந்திருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ட்ரைலரின் ஒரு காட்சியில் விஜய் ஃபைட்டர் ஜெட் ஓட்டுவது போல சீன் அமைந்திருக்கும். ஆனால் அதில் விஜய் ஆக்சிஜன் மாஸ்க், ஹெல்மெட் என எதுவுமே இல்லாமல் வெறும் ஹெட்செட் மட்டுமே அணிந்து இருக்கிறார். இது என்ன லாஜிக் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்த பெரிய விவாதமே தற்போது இணையத்தில் நடந்து வருகிறது.