கேஜிஎப்-2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!!!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்துள்ள ஆதிரா கதாபாத்திரத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளீயிட்டுள்ளன

கேஜிஎப்-2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!!!

கேஜிஎஃப் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதைவிட பிரமாண்டமாக கேஜிஎஃப் பாகம்-2 உருவாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. கேஜிஎஃப் 2 மிரட்டலாக உருவாக்கப்பட்டு புதிதாக பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாராகி வந்த நிலையில் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் 2 ஜூலை 16ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டதால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் என படக்குழு ஆலோசித்து வருகிறது.

Image

இந்நிலையில், இன்று பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆதிரா கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.