‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ... ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’. இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலம்  ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார். சூர்யா மற்றும் ரம்யா பாண்டியன் இணையும் இப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி இப்படம் வருகிற 24-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களை தொடர்ந்து,நடிகர் சூர்யா தயாரிப்பில் ஓடிடி-யில் வெளியாகும் 3-வது படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.