”எங்க சார டிஸ்டர்ப் பண்ணாதீங்க” : குஷ்புவை செல்லமாய் கண்டித்த டிடி! குஷ்பு அளித்த பதில் என்ன தெரியுமா?

”எங்க சார டிஸ்டர்ப் பண்ணாதீங்க” : குஷ்புவை செல்லமாய் கண்டித்த டிடி! குஷ்பு அளித்த பதில் என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநராக வலம் வரும் சுந்தர் சி தற்போது ஜெய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அம்ருதா ஐயர் மற்றும் ரைசா வில்சன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் டிடி நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் படப்பிடிப்பின் இடைவெளியின்போது தனது மனைவி குஷ்புவுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார் இயக்குனர் சுந்தர் சி. அப்போது அங்கு வந்த டிடி எங்கள் டைரக்டர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார், அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று செல்லமாக குஷ்புவிடம் கோபித்து கொண்டார். அப்போது குஷ்பு வெட்கத்துடன் ’நான்தான் அவரை டிஸ்டர்ப் பண்ண முடியும்’ என்று கூற அதற்கு டிடி, ‘பாத்துக்கோங்க மக்களே, என்ன ஒரு கணவன் மனைவி. எல்லோரும் பாத்து கத்துக்கோங்க’ என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பின் இடையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை டிடி அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களிலும்  வெளியாகி வைரலாகி வருகிறது.