புதிய அவதாரத்தில் நடிகர் அஜித்தின் கிளிக்ஸ்...! இணையத்தில் படு வைரல்... கொண்டாடும் ரசிகர்கள்!!

வெள்ளை வேஷ்டி மற்றும் வெள்ளை துண்டுடன் கோவிலுக்கு சென்ற நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய அவதாரத்தில் நடிகர் அஜித்தின் கிளிக்ஸ்...! இணையத்தில் படு வைரல்... கொண்டாடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடியை தாண்டி வசூலை ஈட்டியது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த பட வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இவர் நடிக்கவிருக்கும் ‘அஜித் 61’ படத்திற்காக நடிகர் அஜித் தயாராகி வருவதும், வருகின்ற ஏப்ரல் 2வது வாரம் இப்படத்தின் படபிடிப்பு தொடங்க உள்ளதாகவும், இந்த படம் ’மணி ஹெய்ஸ்ட்’ பாணியில் ஒரு வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்திற்காக நீண்ட வெள்ளை தாடியுடன் கடந்த சில நாட்களாக தோற்றமளிக்கும் அஜித், சமீபத்தில் கேரளாவில் உள்ள கல்பாதி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு வெள்ளை வேஷ்டி மற்றும் வெள்ளை துண்டுடன் கோயிவிலுக்கு வந்த அஜித்தை, கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். 

அப்போது அங்கு மனம் உருகி பிரார்த்தனை செய்துக்கொண்டிருந்த  நடிகர் அஜித்தின் சில புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் சிலர் அந்த போட்டோவை அதிகம் பகிர்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், தங்களது லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.