"போ போ” சிங்கிள் பாடல் நாளை வெளியீடு; தி லெஜெண்ட் படத்தின் அடுத்த பாடல்:

தி லெஜெண்ட் படத்தின் மூன்றாவது சிங்கிள், “போ போ” நாளை மாலை 5:30 மணியளவில் வெளியாகிறது. இது குறித்த தகவலை வெளியிட்டது படக்குழு.

"போ போ” சிங்கிள் பாடல் நாளை வெளியீடு; தி லெஜெண்ட் படத்தின் அடுத்த பாடல்:

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில், தி லெஜெண்ட் சரவண அருள் நடிப்பில், தமிழ், தெலுங்கு,  மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வருகிற ஜூலை 28ம் தேதி, உலக தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

ஜேடி ஜெர்ரி இயக்கிய இந்த படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசைமைத்துள்ளார். மேலும், வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் போன்ற பிரபல பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, நடன இயக்குனர்களாக, ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் போன்றவர்களும், ஸ்டண்ட்சுக்கு அனல் அரசும் இணைந்து, பிரம்மாண்ட படக்குழு கொண்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறார் தி லெஜெண்ட் சரவண அருள்.

இந்த படம் தான் மறைந்த நடிகர் விவேக்கிற்கு இறுதி படமாக அமைந்த நிலையில், அவருடன், பிரபு, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், விஜயகுமார், போன்ற பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ் ட்ரெயிலர் மே 29ம் தேதி வெளியாகிய நிலையில், தமிழ் பட ரசிகர்கள் பலரும் பல வகையான நல்ல கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெயிலரை நடிகை தமன்னா வெளியிட்ட நிலையில், படத்தின் இந்தி உரிமத்தை நம்பி ராஜனின் கணேஷ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றது. மேலும், கன்னட படத்தின் ட்ரெயிலரை இன்று நடிகை ராய் லக்ஷ்மி வெளியிட்ட நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலை நாளை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.