ஜீவா நடிப்பில் புதிய படத்தின் பூஜை...! இயக்குனர் யார் தெரியுமா...?

ஜீவா நடிப்பில் புதிய படத்தின் பூஜை...! இயக்குனர் யார் தெரியுமா...?

'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்' என ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைகளைக் கொடுப்பதில் முன்னணியாக இருப்பது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம். தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தயாரித்து வருகிறது.

இந்நிலையில் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், தங்களது அடுத்தப் படத்தின் பூஜையை இன்று விமரிசையாக நடத்தியுள்ளது. வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகும் இதில் நாயகனாக ஜீவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இயக்குனர் செல்வராகவனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கவுள்ளார்.

மேலும், கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக சித்தார்த், ஸ்டண்ட் காட்சிகளின் இயக்குநராக மெட்ரோ மகேஷ், ஆடை வடிவமைப்பாளராக சத்யா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். பல்வேறு திரையுலக பிரபலங்கள், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

முன்னதாக பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இதில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் தற்போது பூஜை நடந்த திரைப்படம், நடிகர் ஜீவாவிற்கு, பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இரண்டாவது படமாகும்.  


இதையும் படிக்க : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த வழக்கு...! உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன..?