புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையேயான காதல் காட்சி நீக்கம்.!

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையேயான காதல் காட்சி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையேயான காதல் காட்சி நீக்கம்.!

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையேயான காதல் காட்சி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா இடையிலான காதல் காட்சி ஒன்றில் ஆபாசமான வசனங்களும், சில செய்கையும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  

இது குடும்பத்துடன் பார்க்க வரும் ரசிகர்களை முகம் சுழிக்க வைப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய காதல் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.