நீச்சல் குளத்தில் குறும்பு செய்தவாறே ”நான் வாட்டர் பேபி” என கூறும் ராஷ்மிகா! வீடியோ வைரல்

நேஷ்னல் கிரஷ் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் குறும்பு செய்து கொண்டே “நான் வாட்டர்பேபி” என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்தில் குறும்பு செய்தவாறே  ”நான் வாட்டர் பேபி” என கூறும் ராஷ்மிகா! வீடியோ வைரல்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் ‘கிரிக் பார்ட்டி’என்ற படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானாலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் தனது இடுப்பை காட்டியதன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்வசம் கட்டிப்போட்டார். அதன் பின்னர் தொடர்ச்சியாக தெலுங்கு சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ராஷ்மிகா.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் நின்றுக்கொண்டு குறும்புகள் செய்தபடி “நான் வாட்டர் பேபி” என்று கூறும் வீடியோவை ராஷ்மிகா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது லைக்குகளையும், கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

wiiss