சமந்தாவை மிஞ்சும் கவர்ச்சியில் ரெஜினா கசாண்ட்ரா!

ஆச்சாரியா படத்தின் பாடல் ஒன்றின் சிரஞ்சீவியுடன் இணைந்து ஆடிய ரெஜினா கசாண்ட்ராவின் வீடியோ ரசிகர்களின் மத்தியில் வரவெற்ப்பை பெற்று வருகிறது.

சமந்தாவை மிஞ்சும் கவர்ச்சியில் ரெஜினா கசாண்ட்ரா!

ஒரு பெண் ஒரு ஆணுடன் ஆடினால் அது காதல், பல பெண்கள் பல ஆண்கள் கூடி ஆடினால் அது கொண்டாட்டம், அதுவே ஒரு பெண் பல ஆண்கள் முன் ஆடுவது என்பது  பெண்களை கீழ்த்தரமாக சித்தரித்து வணிக நோக்கோடு மட்டுமே பார்க்கப்படும் ஒரு செயலாகும், இப்படிப்பட்ட செயல் இந்திய சினிமா முழுவதுமே காலம் காலமாக இருந்து வருகிறது. எந்த ஒரு உள்நோக்கம் ஏதுமின்றி எதற்ச்சையாக வைக்கப்படும் ஒரு பாடல், பெண் என்பவள் ஆண்களுக்கான கேலிக்கூத்து என்ற பிம்பத்தையே தொடர்ந்து விதைத்து வருகிறது. எனவே இனிவரும் திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வைக்கப்படும் ஐட்டம் சாங் எனப்படும் குத்துப்பாடலை முடிந்தவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பல முற்போக்குவாதிகள் கருத்து தெரிவித்து வந்தாலும், அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே, மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள், ஒரு கவர்ச்சிப்பாடல் இருந்தால்தான் திரையரங்கிற்கு வருகை தருகிறார்கள் என்றெல்லாம் கூறி இந்த ஐட்டம் பாடல் கலாச்சாரத்தை மேலும் வளர்த்து தான் வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சாரியா படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு கவர்ச்சி ததும்ப ஆட்டம் போட்டுள்ளார் ரெஜினா கசாண்ட்ரா.தெலுங்கு சினிமா ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி காரு இவர் 90களில் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக கொடிகட்டி பறந்தவர். இது வரை 150 படங்களுக்கு மேல் நடித்து இன்று வரையிலும் பல ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

மகேஷ்பாபுவை வைத்து பரத் எனும் நான் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த கொரட்டாலா சிவா இயக்கத்தில் தற்போது ஆச்சாரியா என்ற படத்தில் நடித்து வருகிறார் சீரஞ்சீவி, இந்த படத்தில் ராம்சரண், சோனு சூட், காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு பெரும் பொருட்செலவில் தொடங்கப்பட்ட ஆச்சாரியா படம் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்பு கொரோனா அச்சுறுத்தல் குறைந்து சிறுது இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது முற்றிலுமாக முடிவடைந்துவிட்டது.இந்த பொங்கலுக்கு ஆச்சாரிய படத்தை வெளியிட முடிவு செய்திருந்த படக்குழு ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படம் வெளிவர இருப்பதால் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி படத்தை தள்ளிவைத்து விட்டனர். இந்நிலையில் ஆச்சாரியா திரைப்படத்திலிருந்து கலக்கலான குத்து பாடலின் லிரிக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பாடலில், மெகா ஸ்டார் சிரஞ்சீவுடன் ரெஜினா கசாண்ட்ரா கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு துள்ளலாக ஆட்டம் போட்டுள்ளார். 

தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி அதிலிருந்து குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே அதிகம் நடித்து வந்த ரெஜினா கடந்த ஆண்டு வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி வெகுவான பாராட்டுகளை பெற்றிருந்தார். அப்படி இருக்க தற்போது கவர்ச்சி ததும்ப ததும்ப தாறுமாறான உடையில் சீரஞ்சீவியுடன் குத்தாட்டம் போட்டுள்ளது பார்ப்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இணையத்தில் வெளியான இந்த பாடல் ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கி தற்போது டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா.. ஊஊ சொல்றியா மாமா பாடலுக்கு போட்ட ஆட்டத்தையே ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து வரும் நேரத்தில் அதேபோல மேலும் ஒரு ஐட்டம் சாங் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள்  கொண்டாட்டி வருகின்றனர். அதனால் சமந்தா போலவே ரெஜினாவின் சானா கஷ்டம் பாடலும் வேற லெவெலில் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.